பிக்பாஷ் லீக் வரலாற்றில் முக்கிய ஒப்பந்தம் – சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாபர் அஸம்! | key addition in Big Bash League history Babar Azam joins Sydney Sixers
ஆஸ்திரேலியாவில் நடைபெறும், ஐபிஎல்-க்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற, பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அஸமை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை பிக்பாஷ் லீக் வரலாற்றின் ஆக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் தேர்வு என்று ஆஸ்திரேலிய ஊடகம் உயர்த்திப் பேசியுள்ளது. 14 ஆயிரம் சர்வதேச ரன்களுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பிரமாதமான இன்னிங்ஸ்களை ஆடி சீரான முறையில் ரன்களைக் குவித்து வரும் பாபர் அஸம் 2022-ல் ஐசிசி…