பவுண்டரி கேட்ச்: புதிய விதி சொல்வது என்ன? – ஒரு விரைவுப் பார்வை | about new boundary line catch law rule in cricket explained
சென்னை: கிரிக்கெட் விளையாட்டில் பவுண்டரி லைனை ஒட்டி நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தம் செய்து புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி). அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த 2023 பிக் பேஷ் லீக் கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் நெசர், பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச்சினை ரெபரான்ஸாக எடுத்துள்ளது ஐசிசி. அதாவது பந்தை கேட்ச் செய்ய இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு உள்ளேயும்…