Monthly Archives: June, 2025

‘இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதே இலக்கு’ – ஷுப்மன் கில் திட்டவட்டம் | india captain Shubman Gill reveals his goal is to take all 20 wickets of England

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று (ஜூன் 20) ஹெடிங்லீயில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார். மேலும் 4 முழுநேர பவுலர்கள் அணியில் இருப்பார்கள். ஆகவே 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுதல்தான் வெற்றிக்கு வழி வகை செய்யும். எவ்வளவுதான் ரன்கள் அடித்தாலும் போட்டியை வெற்றி பெற எதிரணியின் 20 விக்கெட்டுகள் அவசியம் என்கிறார் ஷுப்மன் கில்.…

“வைரங்கள், ரூ.10 லட்சம்..” ஒரு தொலைபேசி அழைப்பில் சிதைந்துபோன பெண்ணின் வாழ்க்கை!

அதன் பின்னர் காவல் துறையினர் தலையிட்டு விசாரணை மேற்கொண்டதில், இந்த அழைப்பு தொலைபேசி எண் தெரியாத ஒரு அழைப்பு என்றும் இது மோசடி அழைப்பு என்றும் கண்டறிந்தனர்.கடைசியில் போலீசார் புஷ்பலதாவை கண்டுபிடித்தபோது அவர் பலவீனமாக இருந்ததாகவும் இத்தனை நாட்களுக்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் நல்லவர்கள் என்றும் அவர் உறுதியாக இருப்பதாக காவல்துறையின தெரிவித்தனர்.அவருக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கினாலும் அவரால் எதார்த்தத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.”அவர் கிராமவாசிகளிடமும் உறவினர்களிடமும் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஏன் என்று…

‘அவரது பெயர் நீடித்து நிலைக்க என்னால் முடிந்ததை செய்கிறேன்’- பட்டோடி குடும்பத்திடம் பேசிய சச்சின்

சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் கௌரவம் அளிக்கும் வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு “ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிமுக விழா லண்டனில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் – சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன் இந்த கோப்பை பட்டோடி…

சென்னை: லாரி மோதி பள்ளி மாணவி பலி – கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இன்று ஜூன் 20 தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் மற்றும் இணைய செய்தித்தளங்களில் இடம் பெற்றுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “சென்னை கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி…

ஓய்வு பெறுவதாக விட்டோவா அறிவிப்பு | czech tennis player two time wimbledon champion Petra Kvitova to retire

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க ஓபன் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 30-ம் தேதி லண்டனில் தொடங்க உள்ள விம்பிள்டன் தொடரில் கலந்துகொள்ள 35 வயதான பெட்ரா விட்டோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் அவர், தனது ஓய்வு முடிவை சமூக வலைதளத்தில்…

LA Lakers: ரூ.86,000 கோடிக்கு விலைபோன கூடை பந்து அணி – முடிவடையும் 46 ஆண்டு லெகஸி!

அமெரிக்காவின் உள்நாட்டு கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ், 10 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக மதிப்புள்ள விளையாட்டு அணியாக உருவாகியிருக்கிறது என ESPN அறிக்கையில் கூறப்படுகிறது. தற்போது லேக்கர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் பஸ் குடும்பம், மார்க் வால்டர் எனும் பில்லியனருக்கு அணியின் உரிமையை விற்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கெனவே அணியின் கணிசமன அளவு பங்குகளை வைத்திருக்கிறார் மார்க். Words out! I liked that LAX rhymed with…

ஆமதாபாத் விமான விபத்து: எஞ்சின்களின் நிலை பற்றி ஏர் இந்தியா கூறிய தகவல் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம் விபத்துக்குள்ளானது.கட்டுரை தகவல்கடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சின் புதியது என்றும் மற்றொரு எஞ்சினை சர்வீஸ் செய்வதற்கு வரும் டிசம்பர் மாதம் வரை காலக்கெடு இருந்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் அளித்த பேட்டியில், விமானத்தின் இரண்டு…

100+ கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த ஐபிஎல் 2025 | IPL 2025 shatters viewership records as T20 reaches a billion people

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 போட்டிகள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் மொத்தம் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணி – பஞ்சாப் கிங்ஸ் அணி மோதிய இந்த இறுதிப் போட்டிதான் அதிக பார்வைகளை…

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு; `திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது’ – சீமான்

சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதி, ஆரிய வழிப்பாட்டு முறையில் கடைபிடிப்பதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை ஆர்வம்? வடமொழி வழிபாட்டைக் கடைபிடிப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழர் உரிமையை தி.மு.க. அரசு காக்கும் முறையா? 2,500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர் பண்பாட்டுத் தொன்மங்கள் கிடைத்துள்ளது பெருமை என்பதை ஏற்கும் தி.மு.க. அரசு, தமிழர் நிலத்தில் தமிழ்க் கடவுளுக்கு வடமொழியில் வழிபாடு நடந்துள்ளது என்பதை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறை…

1 9 10 11 12 13 30