விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! – மருத்துவர்கள் பரிசோதனை | Villupuram: Lizard’s tail in Chief Minister’s breakfast program!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 67…