இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்றியது! – நடுங்க வைத்த இமயம் | திசையெல்லாம் பனி- 4 | My Vikatan series about Himalayas bike trip
என்னுடைய ஆறு அடுக்கு லேயர்களையும் தாண்டிக் குளிர் ஊடுருவி நெஞ்சைத் தாக்கியது. உள்ளூர ஏற்படும் நடுக்கம் எனச் சொல்வார்களே, அதை நான் அன்று வாழ்வில் முதல் முறை உணர்ந்தேன். மலை காற்று சுழன்று சுழன்று அடித்தது. அத்தனை பெரிய கூடாரம் கூட ஆட்டம் கண்டது. தார்ப்பாய் துணிகள் காற்றில் மோதி படபடத்த சத்தம், என் நடுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அந்த நிலைமையில் என்னால் உண்பதற்கு கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முடியும் எனத் தோன்றவில்லை. அப்படியே சுருண்டு…