திருநெல்வேலி: நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்
16 நிமிடங்களுக்கு முன்னர்நெல்லையில் ஏற்கெனவே சாதி தொடர்பான பிரச்னையால் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை தற்போது மீண்டும் தாக்குதலுக்கு ஆளானார். எனினும் இது சாதி ரீதியான தாக்குதல் இல்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.நெல்லை கொக்கிரக்குளம் பகுதிக்கு தனியே சென்ற சின்னதுரையை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி, மொபைல் போனை பறித்துள்ளனர்.இதில் காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி,”சின்னதுரைக்கு அபாயமான காயங்கள் ஏதும்…