Daily Archives: April 10, 2025
30 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள்: கெயில், வில்லியம்சனை முந்திய சாய் சுதர்சன்! | Most runs in 30 IPL innings Sai Sudharsan surpasses Gayle Williamson
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன். இதன் மூலம் 30 ஐபிஎல் இன்னிங்ஸ் ஆடி, அதிகம் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், கேன் வில்லியம்சன் ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். 23 வயதான சாய் சுதர்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் குஜராத் அணிக்காக விளையாடி…
இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட ஒற்றைக்கண் சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?
பட மூலாதாரம், SAJITH PREMADASA’S MEDIA UNITகட்டுரை தகவல்இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார்.முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித்…
IPL 2025: “இந்த வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடுகிறார்கள்” – அஷ்வின் சொல்லும் வீரர்கள் யார்?
18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஷ்வின் ரவிசந்திரன் தனது யூடியூப் சேனலில் ஐபிஎல் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்தவகையில் ஐபிஎலில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் குறித்து அஷ்வின் பேசுகையில், “இந்த சீசனில் நிறைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.பிரியான்ஷ் ஆர்யாகுறிப்பாக பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார். கடந்த வருடம் டெல்லி ப்ரீமியர் லீக்கில் பல ரெக்கார்டுகளை முறியடித்திருந்தார். ஒரு வீரரிடம் நல்ல பேட்டிங் ஸ்டைல் இருக்கிறது. நன்றி
`இனி நானே பாமக தலைவர்’ ; தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி`அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது’தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய…
‘பாராட்டும் வகையில் இருந்த போராட்ட குணம்’ – வெற்றியை தவறவிட்ட சிஎஸ்கே அணி | csk shows fighting spirit but misses victory versus punjab kings ipl 2025
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் சிஎஸ்கேவின் 4-வது தோல்வியாக இது அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள்…
விடுதலைப்புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது – இலங்கையில் நடப்பது என்ன?
படக்குறிப்பு, 8 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 72 மணி நேரம் தடுத்து வைக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது…
14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் – ஹைலைட்ஸ்
கலைஞர் கருணாநிதி எழுதிய `பொன்னர் சங்கர்’ வரலாற்று நாவலைத் தழுவி நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து `பொன்னர் சங்கர்’ திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்திரைப்படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.Ponnar Shankarஇத்திரைப்படம் எடுக்க முழுமையாக 4 வருடங்கள் செலவானதாம். மற்ற களங்களைக் கொண்ட படங்களைக் காட்டிலும் ப்ரீயட் திரைப்படங்கள் அதிகமான காலம் எடுத்துக் கொள்ளும். அந்தக் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய கலை இயக்கம்,…
குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்களில் வெற்றி: ராஜஸ்தான் படுதோல்வி | GT vs RR | gujarat titans beats rajasthan royals by 58 runs in ipl 2025
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்களில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் என சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர். இது அந்த அணிக்கு நடப்பு சீசனில் நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ். அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…









