வரிக்கு பதிலடியாக வரி – டிரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் புதன்கிழமை (ஏப். 02) முதல் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாளை, அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ என வர்ணித்துள்ளார் டிரம்ப்.ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர விதி நடைமுறைக்கு வரவுள்ளது.இதனால்,…