பரபரப்பான இறுதிப்போட்டி: `சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வென்ற 26 வயது ஐடி ஊழியர் ஸ்ரீமதி!
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்தது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் முதற்கட்ட போட்டிகள் மதுரையில் தொடங்கி தஞ்சாவூர் , திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை என தமிழ்நாடு முழுதும்…