TVK : ‘கூடுதலாக அடிக்கப்பட்ட இன்விடேஷன்கள்; அலட்சியமாக இருந்ததா காவல்துறை? – தவெக இப்தார் தள்ளுமுள்ளு பின்னணி! |TVK Iftar Event Controversy
இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். எதிர்பார்த்ததை போல நிகழ்வு நடந்து முடிந்திருந்தாலும் தவெக தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது. காரணம், நிகழ்வில் ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவம். நிகழ்வு அரங்கின் கண்ணாடி கதவுகளெல்லாம் உடைபடும் அளவுக்கு ஏற்பட்ட தள்ளு முள்ளுக்கு தவெக தரப்பும் காவல்துறையும் மாறி மாறி பழிபோட்டுக் கொள்கின்றனர்.”ஸ்பாட் அப்டேட்!’6:20 மணியளவில் நோன்பை முடித்து தொழுகை நடத்தி இஃப்தார் விருந்தை எடுத்துக்கொள்ளும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. தன்னுடைய பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து கட்சியின்…