Varun Chakaravarthy : “பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." – ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி
ஆட்டநாயகன்!சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருண் சக்கரவர்த்தி – கோலிஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், என அத்தனை பேரும்…