இன்புளி வெஞ்சோறு, வாழை இலை அல்வா, கருப்பு கவுனி பிரௌனி; கோவையில் கமகமத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்!
அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2’ பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு 11 மாவட்டங்களில் நடந்த இந்தப் போட்டி, இம்முறை 13 மாவட்டங்களில் நடைபெறுகிறது. மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று (15/02/2025) கோவையில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும்…