தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி? | Thaipusam How to simply worship Lord Muruga and get the desired boon?
பூச நட்சத்திரத்தின் மகத்துவம்பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பிரகஸ்பதி. பிரகஸ்பதியைத் தேவர்களின் குரு எனப் போற்றுகின்றன புராணங்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவர் குருபகவான். எனவே முருகப்பெருமான் குருவாக அருளும் தலங்களில் பூச நட்சத்திரத்தன்று வழிபடுவது சிறப்பு. தை மாதத்தில் பூசமும் பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில்தான் சிவபெருமான் திருநடனம் ஆடினார் என்கின்றன ஞான நூல்கள். தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால் திருவருட்பிரகாச வள்ளலார் ஸித்தி விளாகத்தில் அந்த நாளில்தான் ஜோதியில்…