Daily Archives: February 7, 2025

கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி’ – குற்றப்பத்திரிகை தாக்கல் / kallakurichi school roit case, charge sheet say mother is a1

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், மாணவி கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறி, அந்த தனியார் பள்ளியை சூறையாடினர் பொதுமக்கள். அந்த கலவரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.கலவரம் | தனியார் பள்ளிஅந்த…

BCCI: இந்திய வீரர்களுக்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்த பிசிசிஐ! – விவரம் என்ன? | BCCI Gifts Diamond ring for Worldcup winners

நமன் விருதுகள் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் பிசிசிஐ விருது விழாவை நடத்தியிருந்தது. முன்னாள் வீரர் சச்சின், சமகாலத்தில் உலக கிரிக்கெட்டை கலக்கி வரும் பும்ரா ஆகியோருக்கு விருதை வழங்கி சிறப்பித்திருந்தது. இந்த நிகழ்வில்தான் பிசிசிஐ சார்பில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது.பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியின் கடைசி ஓவர் வரை போராடி தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதனை கொண்டாடும் வகையில்தான் பிசிசிஐ…

அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?

பட மூலாதாரம், ANI33 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33 குஜராத்திகள் வியாழனன்று மாலையில் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப்…

தேறாத இங்கிலாந்தை விடுத்து ‘ஆப்கன்’ போன்ற திறன்மிக்க அணிகளை பிசிசிஐ அழைக்கலாமே! | BCCI could invite talented teams like Afghanistan instead England for bilateral

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சமீபமாக 1-4 என்று செம உதை வாங்கியது இங்கிலாந்து. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் என்ற நிலையில் இருந்து கடுமையாகச் சரிந்தது. சுழற்பந்து வீச்சை ஆடத் தெரியவில்லை. ஜடேஜாவிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுத்தது. கடைசியில் 248 ரன்களை எடுக்க இந்திய அணி இதை ஒரு ஸ்கோராக கூட மதிக்காமல் ஆடி வெற்றி பெற்றது. எண்டெர்டெயின்மெண்ட் என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி…

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது? | Manapparai Sexual harassment of girl 4 people including school principal, husband arrested

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் திருச்சி சரக காவல்துறை தலைவர் வருண்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் இருந்த மக்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்து போக்குவரத்தைச் சரி செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம் செய்தியாளர்களிடம், “பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர் மீது புகார் வந்துள்ளது.மாவட்ட…

INDvENG: “நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்” -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷித் | harshit rana took 3 wickets in his debut odi match against england

இந்த நிலையில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் நாக்பூரில் தொடங்கியது. இதில், ஜெய்ஸ்வாலும், ஹர்ஷித் ராணாவும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்து ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்ஷித் ராணா. இங்கிலாந்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களைக் குவித்தது. ஹர்ஷித் ராணா ஒரு மெய்டன் ஓவர் உட்பட 7 ஓவர்கள் வீசி…

FGM: பெண் பிறப்புறுப்பு சிதைப்பு – இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்

காணொளிக் குறிப்பு, பெண் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவது என்றால் என்ன? அது பெண்களை எப்படி பாதிக்கிறது?பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள் 28 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்20 பெண்களில் ஒருவர், ஏதேனும் ஒரு வகையில் எஃப்ஜிஎம் (FGM) அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்கொண்டிருப்பார்கள் என ஐ.நா கூறுகிறது.எஃப்ஜிஎம் என்பது பெண் பிறப்புறுப்பின் பகுதிகள் வெட்டப்படுவதை அல்லது அகற்றப்படுவதைக் குறிக்கிறது. நான்கு வகையான எஃப்ஜிஎம்கள் உள்ளன.பெண் பிறப்புறுப்பு சிதைப்பு…

கில், ஸ்ரேயாஸ், அக்சர் பொறுப்பான ஆட்டம்: இந்தியா வெற்றி | IND vs ENG 1st ODI | shubman Gill Shreyas Axar lead India to victory in first ODI versus england

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்து அரை சதம் கடந்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20…

திருமணத்தில் தகராறு; மீசை, தலை முடியை வெட்டிய குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் -நடந்தது என்ன? | Rajasthan: Rs. 11 lakh fine imposed for shaving mustache

திருமணத்தில் ஏற்பட்ட தகராறால், மணமகன் வீட்டாரின் மீசை, தலை முடியை மழித்ததற்காக ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்து மகா பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் தான் மகா பஞ்சாயத்து என்பர். கிராமத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பஞ்சாயத்து முடிவு எடுக்கும். அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது மகா பஞ்சாயத்து.…

IndvEng : 'அடித்து ஆடிய ஸ்ரேயாஸ்; பக்குவம் காட்டிய கில்!' – இங்கிலாந்தை எப்படி வீழ்த்தியது இந்தியா?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஓடிஐ தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல இந்திய அணி ஆதிக்கமாக செயல்பட்டு முதல் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி எப்படி வென்றது மற்றும் போட்டியின் முக்கியமான தருணங்களை பற்றி இங்கே.India vs Englandபோட்டிக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது. முட்டியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியானது. ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். கடந்த மாதம்தான் கழுத்து…