Daily Archives: February 4, 2025
‘சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸியை வெல்வது கடினம்’ – ரிக்கி பாண்டிங் | hard to go past team india and australia in champions trophy says ricky ponting
துபாய்: ஐசிசி தொடர்கள் மற்றும் அதன் பைனல்கள் என்று வந்துவிட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தவிர்க்க முடியாதவை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த அணிகளின் கடந்த கால செயல்பாடு அப்படி உள்ளது என அவர் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய…
பறவை கூடு சூப்; உலகிலேயே காஸ்ட்லி; பருக ஆர்வம் காட்டும் மக்கள்; என்ன காரணம்? | Bird’s Nest Soup Is One Of Most Expensive Dishes In The World, Here’s Why
இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த சூப்பின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இது சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்கவும், பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இதனைப்…
ராஜஸ்தான்: மீசையை மழித்ததற்காக ரூ.11 லட்சம் அபராதம் – என்ன காரணம்?
பட மூலாதாரம், BBC/Mohar Singh Meenaபடக்குறிப்பு, ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள், கரிரி கிராமப் பிரதிநிதிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்குகிறார்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், மோஹர் சிங் மீனாபதவி, பிபிசி ஹிந்திக்காக4 பிப்ரவரி 2025, 11:03 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ராஜஸ்தானில் உள்ள கரௌலியின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பிடித்தது. இதற்கு காரணம் அங்குள்ள மகாபஞ்சாயத்து எடுத்த முடிவுதான் . ஜனவரி 27 அன்று, கரௌலியின் ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூ.11…
Abisheik Sharma: யுவராஜின் பயிற்சி முகாம்; லாராவின் ஃபோன் கால்- அபிஷேக் சர்மா சாதித்தது எப்படி? |About Abisheik Sharma’s Training Camp with Yuvraj Singh
அபிஷேக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். இந்நிலையில்தான், இந்த டி20 தொடருக்கு முன்பாக முன்னாள் இந்திய வீரர்கள் யுவராஜ் மற்றும் தவாணுடன் அபிஷேக் சர்மா பயிற்சி முகாமில் ஈடுபட்டிருந்ததும், பிரையன் லாராவுடன் போனில் பேசி நிறைய ஆலோசனைகளை வாங்கியிருந்ததையும் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.யுவராஜ் சிங்அபிஷேக் சர்மாவின் ஆரம்பகால பயிற்சியாளரான ராஜ் குமார் சர்மா இதைப் பற்றி பேசுகையில், “முதலில் ஒரு ரஞ்சி டிராபி போட்டியின் போதுதான் யுவராஜ் அபிஷேக் சர்மாவைச் சந்தித்தார். அபிஷேக்கின் திறனைப்…
Siragadikka aasai : ஒன்று சேர்ந்த வில்லிகள், 2k கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ஸ்ருதி | Siragadikka aasai serial new update
ஸ்ருதி காணாமல் போன விஷயத்தை ரவி முத்துவிடம் சொல்கிறார். முத்துவும் மீனாவும் ஸ்ருதியின் ரெகார்டிங் ஸ்டூடியோ சென்றுப் பார்க்கின்றனர். அங்கு வேறு ஒரு முகவரியை சொல்ல அங்கும் போய் விசாரிக்கின்றனர். அப்போது ஸ்ருதி விவாகரத்துச் செய்யும் வழக்கறிஞரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வருகிறது. இருவரும் வழக்கறிஞர் இருக்கும் முகவரிக்கும் செல்கின்றனர். அங்கு ஸ்ருதி காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறார். ரவியை விவாகரத்து செய்யப் போவதாக சொல்கிறார். மீனாவும் முத்துவும் அதிர்ந்துப் போகின்றனர். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது. எப்படியும்…
‘அதிக ரிஸ்க், அதிக பலன் தரும்; டி20-ல் 260 ரன்களை தொடர்ச்சியாக குவிப்பதே இலக்கு’ – கவுதம் கம்பீர் | High risk high reward Goal is to score 260 runs in T20 says Gautam Gambhir
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கைப்பற்றி கோப்பையை வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்து மிரட்டியது. அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். டி20 வடிவில் இந்திய அணியின் 4-வது அதிகபட்ச ஸ்கோராக இது…
Dates: பேரீச்சம் காய், பாய், பழம்… ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..? | Date health benefits: Protects the heart -Siddha doctor explain
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ரத்தக்குழாய்கள் வலுப்பெற்று, ரத்த அழுத்தம் சீராகும். அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம். மேலும் உடலில் ரத்தம் குறைந்தவர்களுக்கு, ரத்த விருத்தி செய்ய உதவுகிறது. உடல் மெலிந்தவர்கள் பேரீச்சம்பழத்தை உண்பதால், நல்ல பொலிவான தேகம் பெறலாம். மாரடைப்பு உள்ளவர்களுக்கு, பேரீச்சம்பழம் மிகவும் நல்லது. இதயத்தசை வலுப்பெற உதவும். ஏற்கெனவே பருமனான தேகம் உடையவர்கள் மற்றும் நீண்ட நாள் செரிமானப் பிரச்னை…
தமிழ்நாடு: நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு – முக்கிய செய்திகள்
பட மூலாதாரம், Getty Images54 நிமிடங்களுக்கு முன்னர்க்யோன் பெர்ரே சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பால், சென்னையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில், “மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் பி.மைத்தீஸ்வரன் (9). சிறுவனுக்கு கடந்த ஜன. 22-ஆம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற…
Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்… தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பரிசளித்த த்ரிஷா! | Gongadi Trisha won player of the serious award in ICC U19 womens T20 world cup
இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருது பெற்றதுடன், தொடர் முழுக்க மொத்தமாக ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்ததால் தொடர்நாயகி விருதும் வென்றார் ஆல்ரவுண்டர் கொங்காடி த்ரிஷா.கொங்காடி த்ரிஷாதன்னுடைய இரண்டு வயதில் தந்தை வாங்கித் தந்த நெகிழி கிரிக்கெட் பேட்டில் தனது கரியரைத் தொடங்கிய கொங்காடி த்ரிஷா, இந்த வெற்றியின் மூலம் தன் தந்தைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மகளின் இத்தகைய வெற்றி குறித்து பேசிய கொங்காடி…