அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்?
பட மூலாதாரம், Special Arrangementகட்டுரை தகவல்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி…