இஸ்ரேல்- ஹமாஸ்: இறுதி கட்டத்தில் காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை – போர் முடிவுக்கு வருமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம்…