Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது… 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி நாயகன் விடைபெற்றார்!
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் 2003, 2007, 2015, 2019, 2023 உலகக் கோப்பைத் தொடர்கள் இந்திய அணிக்கு மறக்க முடியாத சோகங்களை ஏற்படுத்தின. இவற்றில், எதிரணி மொத்தமாக இந்திய அணியின் கனவை நொறுக்கியதென்றால், 2019 உலகக் கோப்பையில் மட்டும் ஒரே ஒரு வீரர் மொத்தமாக இந்திய அணியின் உலகக் கோப்பைக் கனவைத் தகர்த்தார்.2019 உலகக் கோப்பை, இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம். மழையால் அப்படியே தலைகீழாக மாறிய பிட்ச் தன்மை, இரு அணிகளுக்கும்…