“சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் என்ற வாக்குறுதி என்ன ஆனது?” – அண்ணாமலை கேள்வி | TN BJP chief annamalai question DMK in issue about govt schools
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க அரசிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “தமிழகத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த…