பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் ஜாதகத்தை வைத்து அதில் என்னென்ன தோஷங்கள் உள்ளன என்று கணித்துவிடலாம் என்கிறது ஜோதிடம். பல்வேறு தோஷங்களில் முதன்மையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழக்கையில் நிம்மதியே இருக்காது. எத்தனை முயன்றாலும் முன்னேற்றம் என்பதே வராது. நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியம், பதவி உயர்வு, சலுகைகள் என எதுவுமே கிடைக்காது. அவ்வளவு ஏன் திருமணம், மகப்பேறு போன்ற மங்கல காரியங்கள் கூட உங்கள் வீட்டில் நடைபெறாமல் சிக்கலாகி நிற்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4-ம் இடத்தில் கெடுதல் தரும் கிரகங்கள் இருந்து, 6, 8, 12-ம் இடங்களில் நலம் தரும் கிரகங்கள் இருந்தாலும், 5, 9-ம் வீடுகளுக்கு அதிபதியாக அசுப கிரகங்கள் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் அவர்களுக்கு உள்ளதென ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 மற்றும் 9-ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதாக அறியலாம். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி பரிகாரம் பெற சில வழிகள் உண்டென ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் சிறப்பானது பிரம்மஹத்தி பரிகார ஹோமம்.
போரில் ராவணனை வென்ற ஸ்ரீராமபிரான், தெரிந்தோ தெரியாமலோ போரில் உயிரிழந்த மனக்கேதம் நீங்கவும் தன்னைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் ராமேஸ்வரத்தில் நீராடி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்தி பரிகார பூஜை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறே வரகுண பாண்டியனும் படுத்திருந்த ஒருவரை தெரியாமல் குதிரையில் செல்லும்போது மிதித்துக் கொன்றுவிட்டார். அந்த கொலைபாவம் நீங்க, பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூரில் பரிகார பூஜைகள் செய்தார் எனப்படுகிறது.
அதேபோல விக்கிரமச் சோழரின் பிரம்மஹத்தி தோஷத்தை கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் உள்ள ஸ்ரீசோளேஸ்வரர் தீர்த்தார் என்றும், அதற்காக அப்பெருமானுக்கு அங்கே சோழன் கோயில் எழுப்பினான் என்றும் வரலாறு கூறுகிறது.
கும்பகோணம், மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் அமைச்சராக இருந்த திப்பையா பெயரிலேயே திப்பையாராஜபுரம் என்றாகி அதுவே திப்பிராஜபுரம் என்றானது என்கிறது வரலாறு.
அக்னி ஹோத்ரிகளும் பெரும் ஞானிகளும் வாழ்ந்த இந்த ஊர் காஞ்சி மகாபெரியவரின் விருப்பமான ஊர் எனப்படுகிறது. இந்த ஊரில் 3000 பழைமையான ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயம் அமைந்துள்ளது. திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவலிங்க வடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர்.