Yearly Archives: 2024

Rashid Khan Wedding: பாரம்பரிய உடை; பிரமாண்ட மேடை – காபூலில் குவிந்த கிரிகெட் பிரபலங்கள் |Rashid Khan Wedding news

ரஷித் கானின் திருமணத்துடன் அவரது சகோதரர்கள் அமீர் கலீல், ஜாகியுல்லா, மற்றும் ரசா கான் திருமணமும் சேர்ந்து நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கான பாரம்பரிய “பஷ்டூன்’ மக்களின் உடையில் மணமகன்கள் இருப்பதைப் படங்களில் காணலாம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நசீப் கான், மூத்த அணி வீரர் முகமது நபி, இளம் வீரர்கள் அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா சத்ரான், ரஹ்மத் ஷா மற்றும் முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். நன்றி

Health: செரிமானம் முதல் புற்றுநோய் வரை… நம் உடலை காக்கும் எல்லை வீரன் இது! | Onion health benefits from digestion to cancer

நம் சமையலறையில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப்பொருள் வெங்காயம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், சித்த மருத்துவர் விக்ரம் குமார் பெரிய வெங்காயத்தின் மருத்துவப்பயன்கள் பற்றி பேசவிருக்கிறார். ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் என்று வெங்காயத்துக்கு பல பெயர்கள் இருக்கின்றன. வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், அதில் கந்தகச் சத்து இருப்பதுதான். இதுதான், அதன் தோலை உரிப்பவர்களை அழ வைத்து…

Doctor Vikatan: நடிகர் ரஜினிக்கு ஏற்பட்ட அடிவயிற்று வீக்கம் இதய பிரச்னையின் அறிகுறியா? | Rajinikanth: abdominal swelling is a symptom of a heart problem?

அப்டாமினல் அயோடிக் ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். தற்போதைய மருத்துவ முன்னேற்றத்தின்படி, இந்தச் சிகிச்சையை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி தேவையின்றி, எண்டோவாஸ்குலர் (endovascular) சிகிச்சை முறையில் பொருத்தலாம். உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதீத ஸ்ட்ரெஸ் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். அதிலோஸ்க்ளெரோசிஸ் ( Atherosclerosis) என்ற நோய்தான் இதற்கான அடிப்படை காரணம்.  நம் உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து, அவை சுருங்கிவிடுவதால் ஏற்படும்  நிலைதான் அதிலோஸ்க்ளெரோசிஸ். இது ஒரு நீண்டகால நோய்.  இது  பல ஆண்டுகளாக மெள்ள…

அபிமன்யு ஈஸ்வரன் சதம் விளாசல் | Abhimanyu Easwaran scores century

லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன். லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 286 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் அஜிங்க்ய ரஹானே 97 ரன்கள் சேர்த்தார். ரெஸ்ட்…

இஸ்ரேலுக்குள் இரண்டாம் தாக்குதல்: இந்த முறை இரான் சொல்ல நினைத்தது என்ன?

காணொளிக் குறிப்பு, இரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கும்?இஸ்ரேலுக்குள் இரண்டாம் தாக்குதல்: இந்த முறை இரான் சொல்ல நினைத்தது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர்இஸ்ரேல் மீது கடந்த செவ்வாயன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இரான் நடத்திய தாக்குதல் அந்த பிராந்தியத்தை பெரும் பதற்றத்திற்குள் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் இஸ்ரேலுக்குள் இரான் நடத்தியிருக்கும் இரண்டாவது தாக்குதல் இது. இரானின் சமீபத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்? இது குறித்து பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான…

‘தோனி, ருதுராஜ், ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே தக்க வைக்கும்’ – அஜய் ஜடேஜா கணிப்பு | Dhoni Ruturaj ravindra Jadeja in csk retention plan Ajay Jadeja Predicts IPL

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு நடைபெற உள்ள மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் வீரர்களை தக்க வைக்கும் விதிமுறைகள் ( IPL Retention) வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த 7-வது விதிமுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.…

அண்ணா நகர் போக்சோ வழக்கு… விகடன் கட்டுரையும் காவல்துறை விளக்கமும்!

‘தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் அண்ணா நகரில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் செயல்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியதோடு, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து விகடன்.காம் தளத்தில் `காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?’ என்ற தலைப்பில் அக்டோபர் 2-ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தற்போது அந்த கட்டுரைக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் பின்…

சர்பராஸ் கான் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? – பிசிசிஐ ‘மேட்டிமை’ அணுகுமுறை | What else Sarfaraz Khan to do BCCI s approach on team india selection explained

சர்பராஸ் கானுக்கு 27 வயதாகிறது. தன் கிரிக்கெட் பேட்டிங்கில் உச்சத்தில் இருந்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டு மீண்டும் சர்பராஸ் கான் ஓரங்கட்டப்பட்டார். சேப்பாக்கத்தில் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஹெல்மெட், கால்காப்பு, மட்டை சகிதம் ‘ஹெச்’ ஸ்டாண்டிற்கு பின் பக்கம் உள்ள வலைக்குப் பயிற்சி செய்ய அவர் வந்த போது அவரது நடை மற்றும் பாவனைகளில் சாதிக்க வேண்டும், அணியில் தன்னை…

இஸ்ரேல் – இரான் மோதல்: எந்த நாடு யார் பக்கம்?- இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்அக்டோபர் 1-ஆம் தேதி இரவு இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேல் ஹெஸ்பொலா இடையிலான மோதலும் அதிகரித்து வருகிறது.இந்த தாக்குதல்களுக்கு பிறகு, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா மேலும் தெளிவுப்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இந்த பிராந்தியத்தில் நிலைமை மோசமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.இஸ்ரேல் ஹமாஸ் இடையே, கடந்த ஓராண்டாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காஸா மற்றும் மேற்கு கரையில்…

Shami: ‘தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்!’ – ‘பார்டர் – கவாஸ்கர்’ தொடர் குறித்து ஷமி விளக்கம்|Mohammed Shami Breaks Silence On Border-Gavaskar Trophy

இந்நிலையில் இதுகுறித்து முகமது ஷமி விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், ” ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து நான் வெளியேறியதாக பிசிசிஐயோ அல்லது நானோ குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து வரும் இதுபோன்ற செய்திகளுக்கு கவனம் செலுத்துவதை நிறுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSUசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ்…

1 86 87 88 89 90 117