Manu Bhaker : `அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்; இந்த விஷயத்தை…’ – கேல் ரத்னா குறித்து மனு பக்கர் | Manu Bhaker responds to her name being ignored for Khel Ratna award
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியானது. அதில், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மற்றும் டிராக்-ஃப்ளிக்கர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்கள் வென்ற மனு பக்கரின் பெயர்…