Nithish Reddy : ‘தந்தையின் வாழ்நாள் கனவு; அணியின் தேவை’ – எமோஷனல் சதம் அடித்த நிதிஷ் ரெட்டி| Nithish Reddy Century against Australia
80 ஓவர்கள் முடிந்தவுடன் நியூ பாலில் இந்தக் கூட்டணியை பிரித்து விடலாம் என நினைத்தனர். ஆனால், நியூபாலையும் நிதிஷ் ரெட்டியும் வாஷியும் சிறப்பாக எதிர்கொண்டனர். இதன்பிறகு பீல்டை வைத்து விளையாட ஆரம்பித்தனர். டைட்டாக அட்டாக் செய்ய முயன்றனர். போலண்ட்டே அலெக்ஸ் கேரியை ஸ்டம்புக்கு அருகே நிற்க வைத்தெல்லாம் உளவியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தார். நிதிஷ் ரெட்டி அதற்கும் பணிந்து போகவில்லை.தொடர்ந்து அட்டாக் செய்தே ஆடினார். அவர் 80 ரன்களை கடந்திருந்த சமயத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சீக்கிரமே…