திருச்சி: ‘தூதா விடுகிறீர்கள்; இனி மன்னிப்பு இல்லை’ – சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் காட்டம் / Article about police varun kumar and seeman issue!
திருச்சி எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசி வருவதாக, வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டியது. சமீபத்தில் கூட, காவல்துறை மாநாட்டில், ‘ நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண்குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.…