மத யானை சாணத்தில் ஸ்பிரே, புகை, மிளகாய் தூள் தோரணம் – பந்தலூர் யானையை விரட்ட மாற்றி யோசித்த வனத்துறை | pandalur elephant operation update
இந்த புதிய யுக்தி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், “பகலில் வனப்பகுதியில் மேய்ச்சலில் இருந்தாலும் அரிசியின் சுவைக்கு பழக்கப்பட்ட இந்த யானை, இரவில் ஊருக்கு வருகிறது. டிரோன் கேமராக்கள், கும்கி யானைகள் , இரவிலும் கண்காணிக்க தெர்மல் கேமிரா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மதம் பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும் என்பதால், மிளகாய் தூள் தோரணம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின்…