Daily Archives: December 14, 2024

மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு… கொட்டும் மழையிலும் அசத்திய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி! | Aval vikatan super samayal contest in Madurai

சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக, அவள் விகடன் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்த்தி வருகிறது. அந்நிகழ்ச்சி, மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது.போட்டியில் கலந்துகொள்ள காலையிலிருந்து மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.முதல் கட்ட தேர்வுக்காக மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு, சுண்டைக்காய் குழம்பு, சேம்பு பொரியல், துவரம்பருப்பு துவையல்,தேங்காய்ப்பால் சாதம், மட்டன் கோலா குழம்பு, சக்கரை வள்ளி கிழங்கு இடியாப்பம், உளுந்து மூங்கிலரிசி சாதம், சீரகச்சம்பா தக்காளி,…

விஸ்வகர்மா திட்டம் – கலைஞர் கைவினைத் திட்டம் இரண்டும் ஒன்றா? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images and FB/Stalinபடக்குறிப்பு, மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின்படி, பொற்கொல்லர்கள், தச்சர்கள், குயவர்கள் உட்பட 18 வகையான தொழில்களைச் செய்வோர் பலன் பெறலாம்கட்டுரை தகவல்’கலைஞர் கைவினைத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செவ்வாய் அன்று (டிசம்பர் 10) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி தி.மு.க அரசு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.’இரண்டு திட்டங்களும் வேறுவேறு; எந்த தொடர்பும்…

இந்தியா – ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தம்!  | australia scored 28 runs against india in 3rd test called off due rain

பிரிஸ்பன்: இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் டெஸ்ட் தொடர்…

EVKS Elangovan: தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல்; நாளை இறுதி சடங்கு! | EVKS Elangovan died; volunteers pay tribute, funeral tomorrow!

ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சையளிக்க சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டிருகிறது. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு போன்ற அரசியல் தலைவர்கள் மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? – விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதானா?

குகேஷ் தமிழரா தெலுங்கரா என ஒரு பட்டிமன்றமே ஓடிக்கொண்டிருக்கிறது. 130 ஆண்டுகளுக்கும் மேலான செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளம் வயதில் சாம்பியனாகியிருக்கும் சாதனையாளர். இவருக்கு முன்னால் ரஷ்ய ஜாம்பவான் கேரி கேஸ்பரோவ் 22 வயதில் உலக சாம்பியன் ஆகியிருந்தார். குகேஷூக்கு 18 வயதுதான் ஆகிறது.குகேஷ்உலக சாம்பியன் ஆவது அத்தனை எளிதான விஷயமில்லை. அதற்கென கடந்து வர வேண்டிய படிநிலைகள் கடினமானவை. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்றால் மட்டும்தான் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப்பெற முடியும். கேண்டிடேட்ஸ் தொடரில்…

மனிதக் கருவின் மூளை குறித்த ஐஐடி மெட்ராஸின் ஆய்வுகள், மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?

பட மூலாதாரம், IIT Madrasபடக்குறிப்பு, மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும் இந்த தரவுகள் உதவும் என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறதுகட்டுரை தகவல்மனிதக் கருவின் மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது ஐஐடி மெட்ராஸ். 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் மூளையின் 5,132 பகுதிகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும், மூளை…

சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin announces 5 crores for Gukesh

சிங்கப்பூர்/ சென்னை: சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்​பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்​கம், டிராபி​யுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகை​யும் வழங்​கப்​பட்​டது. அவரை ஊக்கப்​படுத்​தும் வகையில் தமிழக அரசு சார்​பில் ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார். சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்​பியன் பட்டம் வென்​றுள்​ளார் தமிழகத்தை…

Junior Vikatan – 18 December 2024 – ஒன் பை டூ: “டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது யார்?” | discussion about tungsten mining issue

பழ.செல்வகுமார் பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க“நிச்சயமாக அ.தி.மு.க-தான், அதிலென்ன சந்தேகம்… ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்த சமயத்தில், தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், அந்தச் சட்டத்திருத்தத்தை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை நிபந்தனைகளின்றி ஆதரித்துப் பேசினார். டெல்லியில் சட்டத்திருத்தத்தை ஆதரித்துவிட்டு, தமிழ்நாட்டில் இரட்டை வேடம் போடுகிறது அ.தி.மு.க. சட்டத்துறை அமைச்சராக இருந்த தம்பிதுரைக்கு, மதுரையில் சுரங்கம் வரக் காரணமே அந்தச் சட்டத்திருத்தம்தான் என்று தெரியாது என்றால், குழந்தைகூட…

Gukesh: சந்திரபாபு நாயுடுவின் `Telugu boy' பதிவும் இணையத்தில் வெடித்த கருத்து மோதலும்!

ஸ்டாலின்`தமிழ்நாடு உன்னால் பெருமை கொள்கிறது’குகேஷ், 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலகிலேயே மிகச் சிறிய வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் தாய்மொழி குறித்து சமூகவலைதளங்களில் ஒரு கருத்து மோதலே ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என இரு மாநில முதல்வர்களும் குகேஷை வாழ்த்தியுள்ளனர். “18 வயதில் மிகச் சிறிய வயதில் உலக சாம்பியன் ஆனதற்கு வாழ்த்துகள் குகேஷ். இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தை உனது சாதனை தொடர வைத்துள்ளது.…