போருக்கு நடுவே ஒரு கனவு; 2026 FIFA கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறத் துடிக்கும் பாலஸ்தீன் அணி!
பாலஸ்தீன் நாட்டின் ஹமாஸ் குழு, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்தநாள் முதல் இன்றுவரை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாகப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலால் இதுவரை 44,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீனின் பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.காஸாஇஸ்ரேல் படையால் பாலஸ்தீனே போர்க்களமாகத் திகழும் இவ்வேளையில், 2026-ல் நடைபெறவிருக்கும் FIFA கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும்…









