இந்தியன் ரேசிங் லீக்: கோவா ஏசஸ் அணி சாம்பியன் | Indian Racing League Goa Aces team champions
கோயம்புத்தூர்: இந்தியன் ரேசிங் லீக் 2024 கார்ப்பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எப்4ஐசி) கார்ப்பந்தயம் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது. பந்தயத்தின் இறுதிப்பகுதியாக கடைசி 2 சுற்றுகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு பந்தய மைதானத்தில் நடைபெற்றன. இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.…









