Daily Archives: November 23, 2024

மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷின்டேவா அல்லது பாஜகவைச் சேர்ந்த ஒருவரா? அடுத்த முதல்வர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேகட்டுரை தகவல்மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போக்கை பார்க்கும் போது, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற வாய்ப்புள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் நிலை தென்படுகிறது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 145 இடங்களை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் பாஜக கட்சி சார்பாக 149 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.தேர்தல் ஆணையத்தின் இணையதள தரவுகளின்படி,…

AUSvIND: `4.30 மணி நேர ஸ்டாண்டிங்; ராகுல் -ஜெய்ஸ்வால் கூட்டணி அசத்தல்!’ -பெர்த் டெஸ்ட் Day2 Report! | Australia v India: Rahul-Jaiswal partnership is amazing

பிட்ச்சின் தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ராகுலும் ஜெய்ஸ்வாலும் நேர்த்தியான இன்னிங்ஸை ஆடினர். இடையில் கேட்ச் ட்ராப்களையும் செய்து ஆஸ்திரேலியர்களும் இந்த கூட்டணிக்கு உதவினர்.Published:Today at 6 PMUpdated:Today at 6 PMAus v Ind ( Trevor Collens ) நன்றி

IPL Mega Auction Live: நாளை நடைபெறுகிறது ஐ.பி.எல் மெகா ஏலம்..! – எப்போது, எங்கு, எதில் பார்க்கலாம்?! | IPL Mega Auction 2024 Live updates

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளனர்.அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த…

‘என்ன சொல்வது என்றே தெரியலை!’ – கம்மின்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசிய ரிஷப் பண்ட் குறித்து லெஜண்ட்கள் | rishabh pant hits cummins ball to sixer legends praises

பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் ரிஷப் பண்ட் அடித்த டி20 ரக சிக்ஸர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுத்தது. இந்திய அணி அப்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் என்று இருந்தது. நேற்று கம்மின்ஸ் பந்து வீச்சும் சரியாக அமையவில்லை. அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ரிஷப் பண்ட் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைக்கும் விதமாக ஆஃப் ஸ்டம்ப் பக்கம்…

America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன? | US man receives successful face transplant after suicide attempt

முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அமெரிக்காவின் மிக்சிகன் ( Michigan) நகரைச் சேர்ந்த டெரெக் பிஃபாஃப் (Derek Pfaff) என்ற 30 வயது நபர், 10 வருடங்களுக்கு முன்னாள் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அவருடைய முகம் சிதைந்துவிட்டது. அதற்கான அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் அவரால் திட உணவுகளை உண்ணவோ, மற்றவர்களிடம் பேசவோ முடியவில்லை. மூக்கு இல்லாத…

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஆட்சி அமைக்கப் போவது யார்? – நேரலை

23 நவம்பர் 2024, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார்…

Pant: `IPL ஏலத்தில் எந்த அணிக்குச் செல்லப்போகிறீர்கள்?' – நாதன் லயன் கேள்வி… பண்ட் பதிலென்ன?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளை மறுநாள் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் (நவம்பர் 24, 25) தொடங்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட், இதுவரை ஐ.பி.எல்லில் யாரும் போகாத விலைக்கு ஏலம் போவார் என்று முன்னாள் வீரர்கள் ஆரூடம் கூறிவருகின்றனர்.ரிஷப் பண்ட்மறுபக்கம், இதற்காகத்தான் பண்ட் அந்த அணியிலிருந்து வெளியேறியதாகப் பேச்சுகள் அடிபட்டது. குறிப்பாக முன்னாள் இந்திய…

Junior Vikatan – 27 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about udhayanidhi

தமிழன் பிரசன்னாதமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “ `சேக்கிழாரின் ராமாயணம்’ என்று சொன்ன தற்குறிக்கு, ஆலமரத்துக்கும் காளானுக்கும் வித்தியாசம் தெரியாததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அடிமையாக, ஒன்றிய பா.ஜ.க அரசுக்குச் சேவகம் செய்தவருக்கு, கரப்பான் பூச்சிபோல மேஜைக்கு அடியில் ஊர்ந்தவருக்கு, ஆரியத்தை, சனாதனத்தை எதிர்க்கும், சுயமரியாதையுடன் இருக்கும் நம்மைக் கண்டால் விஷக்காளான்கள் போலத்தான் தெரியும். எங்கள் இளம் தலைவரைச் சட்டமன்ற உறுப்பினராக்கியது மக்கள் என்பதை பழனிசாமி மறந்துவிட வேண்டாம். கட்சித் தொண்டர்கள் தொடங்கி பொதுஜனம்…

AUS vs IND முதல் டெஸ்ட் | கே.எல்.ராகுல் சர்ச்சை அவுட் | KL Rahul out decision makes controversy perth test

பெர்த்: பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் கள நடுவர் அவுட் வழங்கவில்லை. இதை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் மேல்முறையீடு செய்தனர். இதில் மட்டை முதலில் கால்காப்பில் படுவது போல் தெரிந்தது. ஆனால் பக்கவாட்டு கோணத்தை பார்த்த போது பந்து மட்டையை நெருங்கும் போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை…

இலங்கை :அநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கருத்துஅநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?3 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.இந்த வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் தேசியக் கோரிக்கையை கைவிட்டனரா? இலங்கை உள்நாட்டுப்…