Junior Vikatan – 20 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about stalin
சைதை சாதிக்சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகர மேயர் அவர். 2001-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் அம்மையார் ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே, இரண்டாவது முறையாக மேயரானார். தொடர்ந்து மக்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, அமைச்சர், துணை முதல்வர் எனப் படிப்படியாகப் பொறுப்புகளை அடைந்தவர்…