CSK செய்தது தேசநலனுக்கு எதிரானதா? – உத்தப்பாவின் விமர்சனமும் நிதர்சனமும்
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடியிருந்தார். ரச்சின் ரவீந்திரா இந்தத் தொடருக்கு முன்பாக சென்னையிலுள்ள சிஎஸ்கே அணியின் அகாடெமியில் சிறப்புப் பயிற்சிகளை எடுத்திருந்தார். இந்த விஷயத்தை முன் வைத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இப்போது சிஎஸ்கே அணியைத் தேச நலனில் அக்கறை காட்டாத அணி என்பதைப் போலக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.ராபின் உத்தப்பா – சிஎஸ்கேஉத்தப்பா பேசியிருப்பதாவது, “எனக்கு எப்போதுமே…