அமரன் திரைப்படம்: சாய் பல்லவியின் கருத்தால் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏன்?
பட மூலாதாரம், Facebook/Sai Pallaviகட்டுரை தகவல்நடிகை சாய் பல்லவி தற்போது ஒரு சமூக ஊடகச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.சில சமூக ஊடக பயனர்கள் வலைதளங்களில் ‘சாய் பல்லவியை புறக்கணியுங்கள்’ (Boycott Sai Pallavi) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.“இந்திய ராணுவத்திடம் சாய் பல்லவி மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று எக்ஸ் தளத்தில் தன்மய் குல்கர்னி என்ற பயனர் பதிவிட்டுள்ளார். “சாய் பல்லவி கூறியதை பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை,” என்று எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி ஸ்ரீபாதா பதிவிட்டுள்ளார்.…