Monthly Archives: October, 2024

ரச்சின் சதம்: முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 356 ரன்கள் முன்னிலை | IND vs NZ முதல் டெஸ்ட் | new zealand lead by 356 runs first innings versus team india bengaluru test

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 134, கான்வே 91 மற்றும் சவுதி 65 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், இரண்டாம் நாளன்று டாஸ் வென்ற இந்திய…

தெலங்கானா: பழங்குடி கிராமத்தில் கன்டெய்னரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, தெலங்கானா: பழங்குடி கிராமத்தில் கன்டெய்னரில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்14 நிமிடங்களுக்கு முன்னர்தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தின் எட்டுருநகரம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள பங்கருபள்ளி ஆதிவாசி கிராமத்தில் ஒரு கன்டெய்னர் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கரில் இருந்து புலம்பெயர்ந்த கொட்டி கோயா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றன.வனத்துறை விதிகளின்படி, காப்புக் காட்டுக்குள் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க முடியாது. இந்த விதியின் காரணமாக, பங்கருபள்ளி கிராமத்தின் தொடக்கப்பள்ளி கடந்த 14 ஆண்டுகளாக ஒரு சிறிய ஓலைக் குடிசையில்…

Ranji Trophy: ‘தமிழக மைதானத்தை கண்டு வியந்த ஜெயதேவ் உனத்கட்’ – அசர வைத்த கோவை அசோசியேஷன்|Unadkat appreciates Coimbatore Cricket Association

இதனைத் தொடர்ந்து சவுராஷ்ட்ரா அணியின் கேப்டன் உனத்கட் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனை வெகுவாக பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அவர் கூறியிருப்பதாவது, “12 மணி நேரத்தில் மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீரை முழுமையாக வடிய செய்து ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடுதான் அத்தனை மட்டங்களுக்குமான கிரிக்கெட்டிலும் ஆகச்சிறந்த உள்கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு தொடர்ச்சியாக சாம்பியன் வீரர்களை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. நாங்கள் இந்தப் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனாலும் மைதான பராமரிப்பாளர்களை பாராட்டியே ஆக வேண்டும்.…

டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ஹேமங் பதானி! | Hemang Badani to take over as Delhi Capitals head coach

புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹேமங் பதானி டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரோடு மற்றொரு முன்னாள் இந்திய வீரர் வேணுகோபால் ராவை இயக்குநராக நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். ஏழு சீசன்களுக்குப் பிறகு ரிக்கிபாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் தலைமை கோச் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்று பஞ்சாப் கிங்ஸுக்கு தலைமைப் பயிற்சியாளர் ஆனார். இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட டெல்லி கேபிடல்ஸ்…

'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' – உறுதிப்படுத்திய இஸ்ரேல்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார். Source link

Ind Vs Nz : ’46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!’ – என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்? | India Vs New Zealand: Rohit Sharma Press Meet

Rohit SharmaSurjeet YADAVஇந்நிலையில், இன்றைய நாள் ஆட்டம் முடிந்தவுடன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். அங்கே பேசுகையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்துக்கு கேப்டனாக தான் எடுத்த முடிவுகள்தான் காரணம் என வெளிப்படையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு பேசி கவர்ந்திருக்கிறார்.ரோஹித் பேசுகையில், “பிட்ச்சில் புற்கள் இல்லாமல் இருந்தது. இதனால் வழக்கமான இந்திய பிட்ச்சாக இருக்கும் என நினைத்தோம். இந்திய மைதானங்களில் முதல் செஷன் எப்போதும் கடினமாகத்தான் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு இருக்கும். முதல் செஷனுக்கு பிறகு திரும்ப…

“என் கணவரின் கைகோர்த்து என்னைத் தகனம் செய்யுங்கள்” – கணவர் இறந்த மறுநாளே தற்கொலை செய்த மனைவி! | Air force: Wife commits suicide the day after husband’s death

டெல்லியில், இந்திய ராணுவப் படையில் வேலை பார்க்கும் பெண் அதிகாரியொருவர், விமானப் படையில் வேலைபார்க்கும் தனது கணவர் உயிரிழந்த செய்தியறிந்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, விமானப் படை லெப்டினன்ட் அதிகாரி தீன்தயாள் தீப் மற்றும் இவரின் மனைவியான ராணுவ அதிகாரி ரேணு தன்வார் ஆகியோர் 2022-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இதில், பீகாரைச் சேர்ந்த தீன்தயாள் தீப் ஆக்ராவிலுள்ள விமானப்படை நிலையத்தில் பணியமர்த்தப்பட்டதையடுத்து, டெல்லி கண்டோன்மென்ட்டில் விமானப்…

முதல் டெஸ்ட் 2-வது நாள்: 50-க்குள் சுருண்ட இந்தியா; ஆதிக்கம் செலுத்திய நியூஸி! | New Zealand scored 180 runs against india in 1st test match

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 180 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது. டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (அக்.16) தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக…

பாகிஸ்தான்: இந்தியாவைவிட சீனாவுக்கு அதிக முக்கியத்துவமா? எஸ்.சி.ஓ. உச்ச மாநாட்டில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், @DrSJaishankarபடக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்கட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, பிபிசிக்காக17 அக்டோபர் 2024, 04:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்இறுக்கமான முகத்துடன் வணக்கம் வைத்து, அரை மனதுடன் தலையசைத்து, தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல் இரு நாட்டின் பிரமுகர்கள் விலகி நிற்கிறார்கள்.கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும்…

1 12 13 14 15 16 31