யூக்ளிட் தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?
பட மூலாதாரம், ESA/Euclid/Euclid Consortium/NASA; ESA/Gaia/DPAபடக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம்கட்டுரை தகவல்‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது.இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக்கி…