பந்தலூர்: மூடப்பட்ட 50 ஆண்டுக்கால ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி; வருத்தத்தில் மக்கள்! காரணம் என்ன? | nilgiri government school closed
மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடிகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை கல்வியில் மேம்படுத்தும் வகையில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறப்பு பள்ளிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லி நீலகிரியில் இயங்கி வந்த அரசு பள்ளிகளை தொடர்ந்து மூடி வருகின்றனர். இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள கையுன்னி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் தொடக்கப்பள்ளியை மூடியிருக்கிறது…