Daily Archives: October 5, 2024

இந்தியா – இலங்கை: ஜெய்சங்கர் இலங்கை பயணத்தில் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?

பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல்இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின்…

இரானி கோப்பை கிரிக்கெட்: மும்பை முன்னிலை | Irani Cup 2024-25 Day 4 Highlights: MUM leads by 274 runs

லக்னோ: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கெதிரான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்திருந்தது. நேற்று நடைபெற்ற 4-ம் நாள்…

NAC-ன் பொன் கோலம் மற்றும் கொலு போட்டி…

*விதிமுறைகள்:1. நீங்கள் அனுப்பும் கோலம் அல்லது கொலு முழுவதும் தெரியும்படியாக தெளிவாக இருக்க வேண்டும்.2. கொலு மற்றும் கோலத்தை வீடியோ அல்லது புகைப்படம் இரண்டு வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம்.3. கோலம் போட்டவரும் நீங்கள் அனுப்பும் படத்தில் இருக்க வேண்டும். கொலுவுக்கும் இது பொருந்தும்.4. கோலத்தை தனிநபராகவோ அல்லது குழுவாகவோ போடலாம். ஆனால், கோலத்திற்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.5. நீங்கள் போட்ட கோலம் / கொலு குறித்த கூடுதல் விவரங்களை (டிசைன், எடுக்கப்பட்ட இடம், பயன்படுத்திய…

Rashid Khan : மூன்று சகோதரர்களுடன் ஒரே மேடையில் ரஷீத் கானுக்கு திருமணம்! – வைரலாகும் புகைப்படங்கள் | Rashid Khan ties knot in a grand ceremony in Kabul

ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் முன்னணி ஆல்ரவுண்டர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கானுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது திருமணம் காபூலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. ரஷித் கானுக்கு மட்டுமல்லாது, அவரது சகோதரர்களான ஆமிர் கலில், சகியுல்லா, ரசா கான் ஆகியோருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ரஷீத் கானுக்கும் அவரது 3 சகோதரர்களுக்கு ஒரே மேடையில் நடைபெற்ற திருமணம்நால்வரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும்…

ஏமன்: ஹூத்தி இலக்குகளை தாக்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், DVIDSபடக்குறிப்பு, ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சி குழுவின் 15 இலக்குகளை தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது கட்டுரை தகவல்ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.“கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.ஏமன் தலைநகர் சானா உள்பட ஏமனின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்ததாக செய்திகள்…

14 ஆண்டுகளுக்குப் பின் குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி | Cricket returns to Gwalior after 14 years

குவாலியர்: மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் நாளை (அக்டோபர் 6), இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு இங்கு 2010-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான்…

Rajinikanth: "பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல பேசினார்கள்" – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

நடிகர் ரஜினிகாந்த் (73), கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து ‘இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்யப்பட்டு விட்டது. ரத்தநாளத்தில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு stent பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்’ என தெரிவித்திருந்தது. ரஜினி ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு, லோகேஷின் ‘கூலி’…

நியூஸிலாந்திடம் இந்தியா படுதோல்வி: மகளிர் டி20 உலகக் கோப்பை | Womens T20 World Cup 2024: New Zealand Won India By 58 Runs

துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி வீழ்த்தியது. 9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதியது. இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கியது.…

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொலை என காவல்துறை அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்3 மணி நேரங்களுக்கு முன்னர்என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.என்கவுன்டர் நடந்த இடத்தில் பெரிய எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது.என்கவுன்டரை அடுத்து, தேடுதல் வேட்டை தொடர்கிறது என்றும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.பிபிசி செய்தியாளர் அலோக் புதுலிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்,…