Daily Archives: October 4, 2024

HBD Rishab Pant: 'உயிரே போனாலும் நமக்குப் பிடிச்சத விட்றக்கூடாது!' – ரிஷப் பண்ட்டின் கம்பேக் கதை

டிசம்பர் 30 2022 ரிஷப் பண்ட் வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட எதிர்பாரா விபத்து ஒன்று நடக்கிறது.தன்னுடைய அம்மாவைப் பார்ப்பதற்காக உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. கால், கையெல்லாம் உடைந்து, எலும்புகள் நொறுங்கி, உடம்பில் தீ காயங்கள் ஏற்பட்டன. இவரை மருத்துவர்கள் காப்பாற்றி விடலாம், ஆனால் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது கடினம்தான் என்று பலரும் கூறினார்கள். ஒரு ஸ்டார் வீரராக உயர்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே பண்ட்டின் கிரிக்கெட்…

UP: மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக சைபர் மோசடி முயற்சி; அதிர்ச்சியில் உயிர்விட்ட ஆசிரியர்!

தனது மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக மிரட்டப்பட்ட நிலையில், பதறிப்போன தாய் மாரடைப்பால் உயிரழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள அச்சனீரா அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 58 வயதுடைய மாலதி வர்மா ஆசிரியையாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மாலதி வர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களை காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் மகள் பாலியல் வழக்கில் சிக்கி…

நிகோலஸ் பூரனுக்கு 2024 ஓர் அற்புத ஆண்டு – அதிரடியில் கிறிஸ் கெய்லை முந்தி புதிய சிகரம்! | Nicholas Pooran 165 sixes in 2024 have left all Chris Gayle super seasons far behind

கரீபியன் பிரீமியர் லீக்கில் செம்ம பார்மில் இருக்கும் நிகோலஸ் பூரன் 3 நாட்களில் தொடர்ச்சியாக 2 சதங்கள் விளாசினார். டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரரான நிகோலஸ் பூரன் இந்த ஆண்டு கலக்கு கலக்கென்று கலக்கியுள்ளார். இந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் 11 இன்னிங்ஸ்களில் 506 ரன்களை விளாசினார். சராசரி 56 ரன்கள் என்பதோடு, ஸ்ட்ரைக் ரேட் 169.69. எட்டு நாடுகளின் பலதரப்பட்ட பந்து வீச்சுகளைப் புரட்டி எடுத்துள்ளார். சர்வதேச டி20யாக இருந்தாலும், பிரான்சைஸ் டி20யாக இருந்தாலும், நிகோலஸ்…

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய அணி கடந்த உலகக்கோப்பையின் (2023) அரையிறுதி தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகிறது.கட்டுரை தகவல்எழுதியவர், மனோஜ் சதுர்வேதிபதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக4 அக்டோபர் 2024, 04:43 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையைக் கைப்பற்றி, வெற்றிக்கான நீண்ட இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வருமா?இந்தப்…

Rashid Khan Wedding: பாரம்பரிய உடை; பிரமாண்ட மேடை – காபூலில் குவிந்த கிரிகெட் பிரபலங்கள் |Rashid Khan Wedding news

ரஷித் கானின் திருமணத்துடன் அவரது சகோதரர்கள் அமீர் கலீல், ஜாகியுல்லா, மற்றும் ரசா கான் திருமணமும் சேர்ந்து நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கான பாரம்பரிய “பஷ்டூன்’ மக்களின் உடையில் மணமகன்கள் இருப்பதைப் படங்களில் காணலாம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நசீப் கான், மூத்த அணி வீரர் முகமது நபி, இளம் வீரர்கள் அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா சத்ரான், ரஹ்மத் ஷா மற்றும் முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். நன்றி

Health: செரிமானம் முதல் புற்றுநோய் வரை… நம் உடலை காக்கும் எல்லை வீரன் இது! | Onion health benefits from digestion to cancer

நம் சமையலறையில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப்பொருள் வெங்காயம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், சித்த மருத்துவர் விக்ரம் குமார் பெரிய வெங்காயத்தின் மருத்துவப்பயன்கள் பற்றி பேசவிருக்கிறார். ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் என்று வெங்காயத்துக்கு பல பெயர்கள் இருக்கின்றன. வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், அதில் கந்தகச் சத்து இருப்பதுதான். இதுதான், அதன் தோலை உரிப்பவர்களை அழ வைத்து…

Doctor Vikatan: நடிகர் ரஜினிக்கு ஏற்பட்ட அடிவயிற்று வீக்கம் இதய பிரச்னையின் அறிகுறியா? | Rajinikanth: abdominal swelling is a symptom of a heart problem?

அப்டாமினல் அயோடிக் ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். தற்போதைய மருத்துவ முன்னேற்றத்தின்படி, இந்தச் சிகிச்சையை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி தேவையின்றி, எண்டோவாஸ்குலர் (endovascular) சிகிச்சை முறையில் பொருத்தலாம். உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதீத ஸ்ட்ரெஸ் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். அதிலோஸ்க்ளெரோசிஸ் ( Atherosclerosis) என்ற நோய்தான் இதற்கான அடிப்படை காரணம்.  நம் உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து, அவை சுருங்கிவிடுவதால் ஏற்படும்  நிலைதான் அதிலோஸ்க்ளெரோசிஸ். இது ஒரு நீண்டகால நோய்.  இது  பல ஆண்டுகளாக மெள்ள…

அபிமன்யு ஈஸ்வரன் சதம் விளாசல் | Abhimanyu Easwaran scores century

லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன். லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 286 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் அஜிங்க்ய ரஹானே 97 ரன்கள் சேர்த்தார். ரெஸ்ட்…

இஸ்ரேலுக்குள் இரண்டாம் தாக்குதல்: இந்த முறை இரான் சொல்ல நினைத்தது என்ன?

காணொளிக் குறிப்பு, இரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கும்?இஸ்ரேலுக்குள் இரண்டாம் தாக்குதல்: இந்த முறை இரான் சொல்ல நினைத்தது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர்இஸ்ரேல் மீது கடந்த செவ்வாயன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இரான் நடத்திய தாக்குதல் அந்த பிராந்தியத்தை பெரும் பதற்றத்திற்குள் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் இஸ்ரேலுக்குள் இரான் நடத்தியிருக்கும் இரண்டாவது தாக்குதல் இது. இரானின் சமீபத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்? இது குறித்து பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான…

‘தோனி, ருதுராஜ், ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே தக்க வைக்கும்’ – அஜய் ஜடேஜா கணிப்பு | Dhoni Ruturaj ravindra Jadeja in csk retention plan Ajay Jadeja Predicts IPL

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு நடைபெற உள்ள மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் வீரர்களை தக்க வைக்கும் விதிமுறைகள் ( IPL Retention) வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த 7-வது விதிமுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.…