சென்னை: உதட்டுச்சாயம் பூசியதால் பெண் தபேதார் பணியிட மாற்றமா? மேயர் பிரியா கூறுவது என்ன?
பட மூலாதாரம், PriyarajanDMK/X படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ரா.பிரியாகட்டுரை தகவல்பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி பளிர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ள மாதவி தற்போது ஆவடியில் இருந்து மணலி மண்டலத்தில் அமைந்திருக்கும் அலுவலத்திற்கு கடந்த ஒரு மாதமாக பணிக்குச் சென்று வருகிறார். நாள் ஒன்றுக்கு மொத்தமாக 70 கி.மீ பயணம் செய்து வருவதாகவும், எதிர்த்துக் கேள்வி…









