Monthly Archives: September, 2024

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து | Minister Udayanidhi Congratulates Mariappan who Won Medal on the Paralympics

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி சமீபத்தில் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் பாராலிம்பிக் கில் வெண்கலம் வென்று தாயகம்திரும்பியுள்ள தடகள வீரர் மாரியப்பன், சென்னைமுகாம் அலுவலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பாராலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை கருத்தில் கொண்டு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இது தொடர்பாக அவர்…

“அதிமுக கரைவேட்டி தான் கட்டுகிறேன்… முடிந்தால் வழக்கு போடுங்கள்..” – சொல்கிறார் வைத்திலிங்கம்!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூரில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அதன் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தன் ஆதரவாளர்களுடன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். வைத்திலிங்கம்அ.தி.மு.க-வின் வரலாறு யாரையும் குறை…

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதிக்கு பாராட்டு | Kudos to Tulsimati who Won Silver Medal on Paralympics

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசினார். இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துளசிமதிகூறியது: பாரீஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு…

ரஷ்யா – யுக்ரேன்: அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் நீண்ட தூர ஏவுகணை பற்றி என்ன முடிவு செய்தன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல்சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம்…

சேப்பாக்கம் மைதானத்தில் 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்த விராட் கோலி | Virat Kohli spends quality time at the nets in Chennai

சென்னை: இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். விராட் கோலி, லண்டனில் இருந்து நேரடியாக நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா தலைமயில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தலைமை…

CWC: `சுயமரியாதை முக்கியம்; பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம்; வெளியேறுகிறேன்’ – மணிமேகலை வேதனை

 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.குக் வித் கோமாளி 5-வது சீசன் இப்போது ஒளிபரப்பாக தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ‘குக் வித் கோமாளி’ 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுயமரியாதைதான் முக்கியம்’ என்றும் ‘இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்’…

பாராலிம்பிக்ஸில் ஹாட்ரிக் பதக்கம்: மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு | grand welcome for mariyappan thangavelu

சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் பென்றார். பாராலிம்பிக்ஸில் அவர் வென்ற 3-வது பதக்கமாக இது அமைந்தது. 2016-ம்ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கமும், 2021-ம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் மாரியப்பன் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாரியப்பன் கூறும்போது, “தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக்ஸில் பதக்கம்…

சேலம்: புத்தர் சிலை என்று தீர்ப்பு வந்த பிறகும் இந்து வழிபாடு தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், Ramjiபடக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல்2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு.ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – பாக். இன்று பலப்பரீட்சை | asian champions trophy hockey 2024

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. பாகிஸ்தான் அணியானது மலேசியா, கொரியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா…

கோவை அன்னபூர்ணா விவகாரம்; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி – பின்னணி தகவல்!

இதன் பின்னணி குறித்து பாஜக-வில் விசாரித்தோம், “அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோவை பாஜக-வினர் தான் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதற்கு அண்ணாமலையும் மன்னிப்பு கேட்டுவிட்டார். வானதி சீனிவாசனும், ‘அந்த வீடியோ யார் எடுத்து பரப்பினார்கள் என தெரியவில்லை’ என்றே கூறியிருக்கிறார். Source link

1 14 15 16 17 18 20