Daily Archives: September 24, 2024

ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன?

பட மூலாதாரம், FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்றார் ஹரிணி அமரசூரிய2 மணி நேரங்களுக்கு முன்னர்சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.இதற்குமுன் இலங்கையின் பெண் பிரதமர்களாக…

“ரிஷப் பந்த் திரும்பியது மகிழ்ச்சி; பாகிஸ்தானில் அவரைப் பற்றி கவலைப்பட்டோம்” – வாசிம் அக்ரம் | Wasim Akram calls Rishabh Pant miracle kid after heroic comeback in Chennai

புது டெல்லி: ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் ஸ்விங் பவுலிங் கிங்குமான வாசிம் அக்ரம் தன் அபரிமிதமான மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரிஷப் ஆட்டத்தைப் பாருங்கள். பெரும் துன்பத்திலிருந்து மீண்டெழுந்த அதிமனிதன் அவர். திரும்பி வந்த கையோடு சதம் விளாசிய அதிசய மனிதனும் கூட. அவருக்கு நடந்த கார் விபத்தைக் கேள்விப்பட்டதும், அது நடந்த விதம் குறித்து அறிந்ததும் பாகிஸ்தானில் நாங்கள்…

‘மக்களுக்கு படங்கள் மீது ஆர்வம் குறைந்து வருகிறது, அதனால்…!’- AI டெக்னாலஜி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் | A.R Rahman about AI technology

ஏ.ஆர்.ரஹ்மான்“மக்களுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும் என்றால் பிரமாண்டமான செட்டுகள் வேண்டும். ஆனால் போதுமான அளவு பணம் இருக்காது. மிகவும் சிறிய பட்ஜெட் படங்களில் அதுபோன்ற செட்டுகளை அமைக்க வேண்டும் என்றால் ஏ.ஐ மாதிரியான டெக்னாலஜிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் டெக்னாலஜியைப் பார்த்து பயப்படக்கூடாது. சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட ஒரு பிரமாண்ட ஒரு படத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.” என்று பதிலளித்திருக்கிறார். விகடன்…

மும்பை: சுனில் கவாஸ்கருக்குப் பதிலாக கிரிக்கெட் அகாடமி கட்டும் ரஹானே – பின்னணி என்ன?

மும்பை பாந்த்ரா பகுதியில் கிரிக்கெட் உள்விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க மாநில அரசு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு நிலம் ஒதுக்கி இருந்தது. அந்த நிலத்தைக் குடிசைவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.1988ம் ஆண்டு 2000 சதுர மீட்டர் நிலத்தை மாநில அரசு சுனில் கவாஸ்கருக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த நிலம் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது. இதையடுத்து அந்த நிலத்தை மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியமான மஹாடா திரும்ப எடுத்துக்கொண்டுள்ளது. 60 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில்…

Doctor Vikatan: மீன் முட்டைகளை எல்லோரும் சாப்பிடலாமா… அலர்ஜியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: அசைவம் விற்கும் கடைகள் சிலவற்றில் மீன் முட்டைகள் என்று விற்கிறார்களே, அவை ஆரோக்கியமானவையா? எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? மீன் முட்டைகள், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி ரேச்சல் தீப்திஅடர்த்தியான ஊட்டச்சத்துகளைக் கொண்டது என்ற வகையில் மீன் முட்டை மிகவும் ஆரோக்கியமானது. மீன் முட்டைகளில் அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். மீன் முட்டைகளில் உள்ள சத்துகள்மீன் முட்டைகளை ஆங்கிலத்தில் ‘Roe’ என்று சொல்வார்கள். இவற்றில்…

நீலக்குறிஞ்சி: நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் இந்த மலர்கள் அரிதாகி வருவது ஏன்?

படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பற்றிய சுவாரசிய தகவல்கள்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்23 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன.நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக்…

வங்கதேச அணிக்கு ஃபீல்ட் செட் செய்தது ஏன்? – ரிஷப் பந்த் விளக்கம் | Why I set field for Bangladesh team team india Rishab Pant explains

சென்னை: சென்னை – சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது களத்தில் பேட் செய்த ரிஷப் பந்த் அந்த அணிக்கு ஃபீல்ட் செட் செய்திருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், அது குறித்து ரிஷப் பந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 128 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார் பந்த். அது அணியின் வெற்றிக்கு உதவியது. இந்த இன்னிங்ஸின் போதுதான் வங்கதேசத்துக்கு ஃபீல்ட் செட் செய்திருந்தார். “கிரிக்கெட்டின்…

Tirupati Laddu: திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் என புகார்..! வைரலான வீடியோ; தேவஸ்தானம் விசாரணை! | Tirupati Laddu: Devotees complain that there is a Gutka packet

திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே லட்டு பிரசாதம்தான் பிரதானம். ஆனால், சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் “திருப்பதி பிரசாத லட்டு செய்ய விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டது” என ஒய். ஆர். எஸ் கட்சி மீது குற்றம்சாட்டியது தெலுங்கு தேசக் கட்சி. இந்தக் குற்றச்சாட்டை பல வழிகளில் மறுத்த ஒய்.ஆர். எஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இறுதியில் பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று, “இந்தக் குழப்பத்துக்கு காரணமானவர்கள் மீது…

Ashwin: `நம் குழந்தைகளுக்கு இதை நான் பரிசாகக் கொடுப்பேன்'- மனைவியின் கேள்வியும் அஷ்வினின் பதிலும்

அஷ்வினை அவரின் மனைவி ப்ரீத்தியே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நேர்காணல் செய்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அணியின் இந்த வெற்றிக்கு அஷ்வின் முக்கிய பங்காற்றியிருந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியவர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விகெட்டுகளை…

அநுர குமார திஸாநாயக்க: இலங்கை ஜனாதிபதிப் பதவிக்கான பெரும்பான்மை பெறுவாரா?

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKEபடக்குறிப்பு, இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்ககட்டுரை தகவல்இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.இந்த மூன்று இடங்களை வைத்துக்கொண்டு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறு ஆட்சியை தொடர்வார் என்ற கேள்வி…