சேலம்: புத்தர் சிலை என்று தீர்ப்பு வந்த பிறகும் இந்து வழிபாடு தொடர்வது ஏன்?
பட மூலாதாரம், Ramjiபடக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல்2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு.ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது…