`இஸ்லாமிய பெண் மறுமணம் செய்தாலும், முதல் கணவரிடம் மெஹர் பெற உரிமை உண்டு’ – மும்பை உயர்நீதிமன்றம்! | “Islamic women’s right to receive mahr” Bombay High Court orders
ஒரு முஸ்லிம் தம்பதியினருக்கு 2005-ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். 2008-ல் இவர்களுக்கு விவாகரத்தானது. 2012-ல் அந்தப் பெண் இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் பிரிவு 3-ன் கீழ் பராமரிப்பு தொகைக்காக விண்ணப்பித்து இருக்கிறார். இந்தச் சட்டத்தின்படி, ஓர் இஸ்லாமிய பெண்ணின் திருமண பந்தம் முடிவுற்ற பின், மூன்று மாதங்களுக்குள் மெஹர் பெற உரிமை உண்டு. இது இத்தாத் காலம் (Iddat period) என்று அழைக்கப்படுகிறது.2014-ல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு மொத்த தொகையாக…