RT-PCR சோதனைகளை விட கோவிட் தொற்றை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள்; ஆய்வு சொல்லும் தகவல் என்ன?!|Research says that Trained scent dogs may effectively detect Covid
அமெரிக்காவின் கலிஃபோர்னியா சாண்டா பார்பரா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டாமி டிக்கி பயோசென்ட், இன்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஹீதர் ஜுன்குவேரா ஆகியோர், இந்தக் கூட்டு ஆராய்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டனர். ஆய்வு குறித்து பேராசிரியர் டாமி டிக்கி கூறுகையில், “நாய்களுக்கு வாசனையை அறியும் நூற்றுகணக்கான ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் (Olfactory receptors) உள்ளன. அவற்றின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை உணர்வதற்காகச் செயல்படுகிறது. இதனால் கோவிட் தொற்றோடு தொடர்புடைய துர்வாடைகளைக்கூட நாய்களால் கண்டறிய முடியும்.10.5 ஒலிம்பிக் அளவிலான…






