Yearly Archives: 2023

Doctor Vikatan: மாமனாருக்கு லோ சுகர்; வாக்கிங் போகும்போது மயக்கம்… சர்க்கரை சாப்பிடுவது சரியானதா? | Low sugar; Dizziness while walk… Is it right to eat sugar?

வாகனம் ஓட்டும்போது சிலருக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும். இன்னும் சில நிமிடங்களில் வீடுபோய்ச் சேர்ந்துவிடுவோம்… போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் மட்டும் வேண்டாம். ஐந்து நிமிடங்களில்கூட பேராபத்து நிகழலாம். விமானம் ஓட்டும்போது பைலட்டுக்கு லோ சுகர் ஆகி, விமானம் கீழே விழுந்த வரலாறெல்லாம் நம்மிடம் உண்டு. அந்த அளவுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தாழ்சர்க்கரை நிலை பிரச்னை. லோ சுகர் பிரச்னையைத் தவிர்க்க சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளுக்கு ரத்தச் சர்க்கரையின்…

பால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா? – காமத்துக்கு மரியாதை – S 3 E19 | Will sexual disease become AIDS?

TPHA ஆன்டிபாடி உங்கள் உடலில் இருப்பதால், சிஃபிலிஸ் பால்வினை நோய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, நீங்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறீகள் என்பதை கண்டறிந்து, அதற்கேற்றபடி சிகிச்சை எடுக்க ஆரம்பியுங்கள். முதல் ஸ்டேஜில்தான் இருக்கிறீர்கள் என்றால், இதை முழுமையாக சரி செய்துவிடலாம்.  இரண்டாவது ஸ்டேஜில் இருக்கிறீர்கள் என்றால், நீண்டகால சிகிச்சையின் மூலம் சரி செய்துவிடலாம். சிலர் முழுமையாக சிகிச்சை எடுக்காமல் இருந்துவிட்டால், உடம்புக்குள் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும்.  ஆனால், அதை உடம்பு வெளிப்படுத்துவதற்கு பல வருடங்கள் எடுத்துக் கொள்ளும். சிஃபிலிஸ் பால்வினை நோய் வந்து 15 வருடங்களான நிலைதான் மூன்றாவது ஸ்டேஜ். இந்த ஸ்டேஜில்தான் பயப்பட வேண்டும். ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில்தான் மூளை,…

காஸ்ட் அயர்ன் பேன்களை எப்படி கையாள வேண்டும்..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

இது பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும், குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆனால், ஒரு வார்ப்பிரும்பு பாத்திரத்தில் சமைப்பது நான்-ஸ்டிக் பான் போல எளிதானது அல்ல. உண்மையில், அவை கனமானவை மற்றும் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், அடிக்கடி உங்கள் விரல்கள் சுட்டுக்கொள்ளும். இதேபோன்ற சிக்கலை நீங்கள் கையாளுகிறீர்களா? ஆம் எனில், இந்தக் கட்டுரை உங்களுக்காக.. நன்றி

“கணவருக்கு மூடு வர்றதுக்காக இதைச் செய்யாதீங்க…'' – காமத்துக்கு மரியாதை | S 3 E 22

காமத்துக்கு மரியாதை தொடரின் இந்த மூன்றாவது சீஸனில், வாசகர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிற மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி, இந்த வாரம் `கணவரின் விருப்பத்துக்காகத் தங்கள் நிறத்தை மாற்ற முயன்ற பெண்களுக்கு நடந்த துன்பம் பற்றி’ பகிர்ந்து கொண்டார். Dr. Narayana Reddyபெண்களின் உள்ளாடைகளைத் திருடும் ஆண்கள்! வக்கிரமா… பிரச்னையா? |காமத்துக்கு மரியாதை – S 3 E 14“என்னுடைய கிளினிக்குக்கு அவ்வப்போது சில நடுத்தர வயதுப் பெண்கள் `முகமெல்லாம் வீங்கி’, `முகத்தில் ஆங்காங்கே…

`குலோப் ஜாமூன், ஜாங்கிரி, மைசூர் பாகு’ கிருஷ்ண ஜெயந்திக்கு 88 பட்சணங்கள் – வைரல் போட்டோவின் பின்னணி|krishna Jayanthi function celebration pictures goes viral

கிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்கள் செய்து கொண்டாடுவது இந்தியா முழுக்க வழக்கம். சீடை, அதிரசம், லட்டு, அப்பம், தட்டை, முறுக்கு என்று பட்சணங்களுடன் வெண்ணெயும் அவலும் வைத்து நம் இல்லங்களில் நைவேத்தியம் செய்து கொண்டாடுவார்கள். இவர் அதையும் தாண்டி ஏராளமாகச் செய்து அசத்தியிருக்கிறார்.  ‘பகவான் கிருஷ்ணர் மீதான அவரின் ஆழமான பக்தியைக் கண்டு நான் பெருமிதப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் காமத். தன் பெயரையோ, பிற விவரங்களையோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத இந்தப் பெண்மணி, ஆண்டுதோறும் இப்படி…

சருமப் பொலிவு: வெளிப்பூச்சுகள் தற்காலிகம்தான், உள்ளிருந்து ஊட்டம் பெறவைக்கும் இந்த உணவுகள்!

சருமப் பொலிவு என்பது வெளிப்பூச்சு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சொல்லப்போனால் உள்ளே உட்கொள்ளும் உணவுகளால்தான் உண்மையான, நீடித்த சரும ஆரோக்கியத்தை பெற முடியும். அதற்கு என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து விளக்குகிறார், உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ…உணவியல் நிபுணர் விஜயஸ்ரீசருமப் பராமரிப்பில் லேட்டஸ்ட் டிரெண்ட்… ‘சீரம்’! – யாருக்கு, எப்போது, எப்படி?சத்துகள் இல்லாத பதப்படுத்தப்பட்ட உணவு“இன்று பலரும் 30% மட்டுமே ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்கிறோம். உடலுக்குத் தேவையானதைவிட குறைந்த அளவே கொழுப்புச்சத்தும் ஊட்டச்சத்துகளும்…

கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருக்க போறீங்களா..? இந்த 5 விஷயங்களை தவறாமல் பின்பற்றுங்கள்..!

இந்த தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைத்து பின்னர் அதை அனைவரும் பிரசாதமாக சாப்பிடுவர் நன்றி

Doctor Vikatan: கால் வீக்கம்… இதயச் செயலிழப்பின் அறிகுறியா? | Swollen Legs…Symptom of Heart Failure?

Doctor Vikatan: என் வயது 56. அடிக்கடி கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. கால் வீக்கம் என்பது இதயநோயின் அறிகுறி என்கிறார்களே… உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்கால் வீக்கத்துக்கும் இதய பாதிப்புக்கும் நிச்சயம் தொடர்புண்டு. கால் வீக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது “கன்ஜெஸ்டிவ் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற பிரச்னை. அதென்ன ஹார்ட் ஃபெயிலியர்…என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதயம் சரியாக பம்ப் செய்யாததன் காரணமாக பல…

காரமான சிப்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன்.. டிக் டாக் சேலஞ்சால் நிகழ்ந்த சோகம்!|Teen Dies After Attempting TikTok Spicy one Chip Challenge

தண்ணீர் குடிக்காமல் மிகவும் காரமான சிப்ஸை சாப்பிட வேண்டும் என்ற டிக்டாக் சவாலை முயன்ற 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல சேலஞ்சுகள் பிரபலமடைவது வழக்கம். அந்தவகையில் `One chip challenge’ டிக் டாக்கில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிகவும் காரமான இரண்டு மிளகுகளின் கலவையில் செய்யப்பட்டுள்ள Pacqui சிப்ஸை தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த சேலஞ்ச்.அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயதான ஹாரிஸ் வோலோபா,  டோஹெர்டி மெமோரியல்…

மைதா கலந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

மைதாவைத் தவிர்க்கும் போது, இது போன்ற பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே ஒருமாத காலத்திற்கு மட்டுமில்லாது, வாழ்நாள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக பாதாம் மாவு, தேங்காய் மாவு, ஓட்ஸ் மாவு, கினோவா மாவு, கொண்டைக்கடலை மாவு, தினை மாவு அல்லது பழுப்பு அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாட்டீல். இது உணவில் பலவிதமான மாற்று உணவுகளைச் சேர்த்துக்கொள்வது, சுத்திகரிக்கப்பட்ட மாவு மீதான உங்கள் நம்பிக்கையை குறைக்கும் அதே வேளையில் பலவிதமான…

1 51 52 53 54 55 419