2024 நாடாளுமன்ற தேர்தலின் அரையிறுதி போட்டியாக கருதப்படும் 2023ல் 9 மாநிலங்களின் பேரவை தேர்தல் எப்போது?: அரசியல் தலைவர்களின் புது வியூகங்களால் பரபரப்பு
புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படும் இந்தாண்டுக்கான ஒன்பது மாநில தேர்தல்கள் உள்ளன. அதனால் அரசியல் தலைவர்கள் தங்களது தேர்தல் வியூகங்கள் குறித்து பேசிவருகின்றனர். இன்று 2023 புத்தாண்டு தொடங்கிய நிலையில் இந்தாண்டுக்கான அரசியல் வியூகங்களும் பின்தொடர்கின்றன. இந்தாண்டு மட்டும் 9 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின் 2024ல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும். அதனால் இந்தாண்டு நடைபெறும் 9 மாநில தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாக இருக்கும்…