அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் – தினமும் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணினா போதும்! | Visual Story
ஃபேஸ்வாஷ்காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவவும். இதற்குக் குளிர்ந்த நீரோ, சுடு தண்ணீரோ வேண்டாம். வழக்கமான குழாய்த் தண்ணீரே போதுமானது. இப்படிச் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணரலாம். உடற்பயிற்சிநன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யவும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.கழுத்து உடற்பயிற்சிஉடலில் கழுத்துப் பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப் போடப்படும்.எலுமிச்சை, தேன்வெந்நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கும் போது உடலில்…









