ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு நனவாகுமா? | India Vs Australia 4th Test Day 2 Report: Can India sustain to score a big total?
லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் லயனோடு கைகோத்து 200 ரன்களை நோக்கி கவாஜா ஆடிக் கொண்டிருந்தார். 140.3 ஓவரில் 400 ரன்களைத் தொட்டது ஆஸ்திரேலியா. பல மணி நேரங்களாக இந்திய பௌலர்களைத் திணற வைத்த கவாஜாவின் விக்கெட்டும் ஒரு வழியாக விழுந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின் முதல் பந்திலேயே கவாஜாவின் விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார். டிஃபன்ஸ் ஆட முற்பட்டபோது எல்.பி.டபுள்யூ ஆனது. ரிவ்யூ எடுக்க, அது இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. இறுதியாக, கவாஜாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிறப்பாக…









