அடிக்கடி பெண்ணுறுப்பில் இன்ஃபெக்ஷன்… என்ன காரணம்..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 119
அந்தரங்கப் பகுதியில் வஜைனல் வாஷ், பெர்ஃபியூம் பயன்படுத்துகிற பழக்கம் தற்போது பலரிடமும் இருக்கிறது. இதன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளை ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அவர் திருமணமான இளம்பெண். திருமணத்துக்கு முன்பிருந்தே பெண்ணுறுப்பில் அடிக்கடி இன்ஃபெக்ஷன் வருமாம். அதனால், விலை அதிகமான வஜைனல் வாஷ் மற்றும் வாசனைத் திரவியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், இன்ஃபெக்ஷன் அதிகமாகி கெட்ட வாடையுடன் வெள்ளைப்பட ஆரம்பித்திருக்கிறது. மகப்பேறு மருத்துவரை சந்தித்ததோடு, என்னையும் சந்திக்க வந்திருந்தார். Sexologist Kamaraj…

