Daily Archives: August 26, 2023

ஊற வைத்த பாதாம், திராட்சையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்… பட்டியலிடும் ஆயுர்வேத நிபுணர்!

காலை உணவை அனைத்து வயதினரும் தவறாமல் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க இது அவசியம். மேலும் அதில் காலை உணவில் பால், நட்ஸ், பழங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். பாதம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையா? இதுகுறித்து விளக்கும் ஆயுர்வேத நிபுணரான…

Doctor Vikatan: சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள்… டொமேட்டோ சாஸ், கெட்ச்சப் கொடுப்பது சரியா? | Is it okay to give ketchup and tomato sauce?

Doctor Vikatan: என்னுடைய பிள்ளைகள் இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு சாஸ் இருந்தால்தான் சாப்பிடுகிறார்கள். தக்காளி சாஸ், கெட்ச்சப்,கொடுப்பது சரியானதா…? சோயா சாஸ் சேர்த்த சமையல் ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்இதுபோன்ற சாஸ் வகைகளில் சோடியம் அளவு மிக அதிகம். குறிப்பாக சோயா சாஸில் 100 கிராமுக்கு ஐயாயிரம் மில்லிகிராமுக்கு அதிகமான சோடியம் இருக்கும். உலக சுகாதார நிறுவனம் நமக்கு ஒருநாளைக்கு…

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 3 புளித்த உணவுகள்..!

யோகர்ட் : யோகர்ட் என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த புளித்த உணவு வகைகளில் ஒன்றாகும். பாலுடன் நேரடியாக பாக்டீரியா சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த ப்ரோபயோடிக்ஸ் பாக்டீரியாக்கள் நமது வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களையும் சமநிலையில் வைத்து உதவுகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிப்பதோடு செரிமானம் செய்யப்படும் உணவுப் பொருட்களிலிருந்து சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மேலும் யோகர்ட்டில் கால்சியம், புரோட்டின், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக…

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இதயம், மனித உடலின் மகத்தான இன்ஜின். ஆனால், மானுட வாழ்வின் ஜீவாதாரமான இந்த அற்புத உறுப்பைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புஉணர்வு குறைவு. இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள். இதய நோய் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரியும். பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமையோபதி, வயோதிகர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியர், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை… என அனைத்துத் தரப்பினரையும் பலவகையில் ஆட்டிப்படைக்கின்றன…

18 வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி… ஏஐ தொழில்நுட்ப உதவியால் பேசும் ஆச்சர்யம்!|AI helps 47-year-old stroke patient speak after 18 years

பக்கவாதத்தால் பேச்சின்றி முடங்கிப் போயிருந்த ஒரு பெண்ணுக்கு, அவரது மூளையிடம் இருந்து சிக்னல் பெற்று, அவர் பேச நினைத்ததை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் வார்த்தைகளாக்கி உதவ ம் மருத்துவத்துறையில் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 47 வயதான ஆன் (Ann) 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத கடினமான சூழல் உருவானது.இந்நிலையில் தற்போது ஏ.ஐ. மூலம் மோஷன் – ட்ராக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிமிடத்திற்கு…

இந்தியாவின் மோசமான 10 சாலையோர உணவுகளின் பட்டியல் இதோ..

உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான நம் இந்தியா, எண்ணற்ற மொழிகள், கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் மாநிலங்கள் வாரியாகவும், சர்வதேச எல்லைகளை கடந்தும் புகழ்பெற்றுள்ள பல உணவு வகைகளுக்கும் பல்லாயிரம் வருட வரலாறு உண்டு.இந்த சூழலில் இந்திய தெரு உணவுகளும் (street foods) உலகளவில் மிக பிரபலமானவை. நம்நாட்டிற்கு வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ருசித்து சாப்பிடுவதை விட, நம் நாட்டின் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்களை விரும்பி, ரசித்து சாப்பிடும்…