சிக்கந்தர் ராசா அதிரடி சதம்… நெதர்லாந்தை வென்றது ஜிம்பாப்வே அணி
உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வென்றுள்ளது. ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா அதிரடியாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதவுள்ள இந்த தொடரில் 8 அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி பெற்றுள்ள…



